நான் உடலும் அல்ல
நான் உயிரும் அல்ல
நான் கனவும் அல்ல
நான் நிஜமும் அல்ல
நான் காற்றும் அல்ல
நான் தீயும் அல்ல
நான் நீரும் அல்ல
நான் நிழலும் அல்ல
விதையாகும் மரமா நான்?
மரமாகும் விதையா நான்?
விடையாகும் மொழியா நான்?
மொழியாத வினையா நான்?
விபரீத விளைவா நான்?
விளைவான வினையா நான்?
சருகான உரமா நான்?
உரமான உணர்வா நான்?
நான் நிறமும் அல்ல
நான் அறிவும் அல்ல
நான் இசையும் அல்ல
நான் நடனம் அல்ல
நான் ஒளியும் அல்ல
நான் மொழியும் அல்ல
நான் மௌனம் அல்ல
நான் இதுவும் அல்ல
நான்அதுவும் அல்ல
வெளிச்சத்தில் இருளா நான்?
இருட்டுக்குள் ஒளியா நான்?
கரைதேடும் அலையா நான்?
அழைத்ததும் மழையா நான்?
திசைமாறும் மனமா நான்?
மனம் தேடும் விசையா நான்?
உருமாறும் கறுவா நான்?
கருவாகும் மழையா நான்?
நான் நீயும் அல்ல
நீ நானும் அல்ல
நான் இது அல்ல
நான் அதுவும் அல்ல
நான் எதுவும் அல்ல